இராணுவத்தினருக்கு புதிய ஆட்சியில் முக்கிய பொறுப்புக்கள்!

ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன் பின்னர் தனது நிர்வாகத்தில் இராணுவ அதிகாரிகளிற்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

2005 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தளபதியாக சந்திரசிறி, நியமிக்கப்பட்டார். அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை தனது நிர்வாகத்தில் இராணுவ அதிகாரிகளிற்கு ஜனாதிபதி கோட்டாபாய முக்கிய பொறுப்புக்கள் அளித்து வருவது, இராணுவ நிர்வாகம் குறித்த விமர்சனத்தை பரவலாக ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor