தேர்தல் முறைகேடு என தெரிவித்து இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்!

பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது.

மேலும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. இதனால், மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், உலக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ, பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறுகையில், ‘மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’ என கூறினார்.


Recommended For You

About the Author: Editor