மட்டு பல்கலைக்கழகம் தொடர்பாக விசாரணைகள் அவசியம்- ரத்ன தேரர்!!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வலியுறுத்த, இன்று (புதன்கிழமை) எப்.சி.ஐ.டிக்கு விஜயம் மேற்கொண்ட இவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார். அத்துரலிய ரத்ன தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “ஹீரா அறக்கட்டளைக்காக கூறியே கிழக்கின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காணியொன்றைப் பெற்றுக்கொண்டார்.

அதாவது, இலவசமாக தொழில்நுட்பக் கல்வியைக் கற்பிக்கும் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கிலேயே இந்தக் காணி வாங்கப்பட்டது. பின்னர், இந்த இடத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் கட்டப்பட்டது. இது சட்டவிரோதமான செயற்பாடாகும்.

இதற்கு நிதி பெற்றுக் கொண்ட முறைமையும் சட்டவிரோதமானதாகும். இதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன. நிதி வழங்கிய நிறுவனங்கள் என அனைத்து விடயங்களிலும் சந்தேகங்கள் காணப்படுகின்றன.

தொழில்நுட்பக் கல்லூரி என ஆரம்பத்தல் கூறிக்கொண்டு, இதில் சரீஆ சட்டத்தை கற்பிக்கும் நிறுவனமாகவே உருவாக்கியுள்ளார்கள்.

முற்று முழுதாக அடிப்படைவாதத்தை கற்பிக்கும் கல்வி நிறுவனமாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தவே, நாம் இன்று எப்.சி.ஐ.டிக்கு வருகைத் தந்திருந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor