
வடக்கை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள் சீரமைக்கப்பட்டு அழகு படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே.
அச்செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லியடி நகர்ப்புறத்தினை அப்பகுதி வாழ் இளைஞர்கள் இணைந்து அழகுபடுத்துவதை காணலாம்.
தன்னார்வத்தோடு இவ்வாறான சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபடும் எமது இளைஞர்களை பாராட்டுவதோடு பலரும் தமது ஒத்தாசைகளையும் வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.