ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அலுவலகம் திறந்து வைப்பு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அலுவலகம் இன்று(புதன்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தினுள் அமைந்துள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor