தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா, அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புக்களின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமாகிய த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், பா.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன், எஸ்.சிவாமோகன், என்.கோடீஸ்வரன், ஜி.சிறீநேசன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர், ஆனோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்..ஏ.சுமந்திரனும் சிறப்புரையாற்ற உள்ளனர்.


Recommended For You

About the Author: Editor