
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ் பிரணவதாஸன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் எஸ் பிரணவதாஸன் கூறியுள்ளார்.