கோட்டாபய எதிர்கால தீர்வு தொடர்பில் கூறிய முக்கிய விடயம்!!

அதிகாரப்பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகள் செயற்படுத்த முடியாத திட்டங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி பெரும்பான்மை மக்கள் விரும்பாத ஒன்றை எப்படி கொடுப்பது எனவும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஊடக பிரதானிகளுடன் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், அப்படி கொடுப்பதாக கூறி ஏமாற்றக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என கூறினார்.

அத்தோடு அபிவிருத்தியை மேற்கொண்டு நாட்டில் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் உளவுத்துறையை பலப்படுத்தி நாட்டில் பாதுகாப்பை வலுவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor