தனுஸ்கோடியில் இலங்கை அகதிகள் கைது!

சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற ஈழ அகதிகள் தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியூ பிரிவு பொலிஸார் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று முன் தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்ற 6 பேரை விசாரனை செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் இலங்கை திருகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் என தெரியவந்துள்ளது.

சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன், உதயகுமார் என இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு பேரும் சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் சட்ட விரோதமாக தோணியில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவினர் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், விசாரனைக்கு பின்னர் அவர்கள் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில் பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து இலங்கை திரும்பி செல்ல தனுஸ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கை அழைத்து செல்ல இலங்கையை சேர்ந்த படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தாகவும் ஆனால் கியூ பிரிவினரை கண்டதும் படகோட்டி படகுடன் தப்பி சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை பணம் 8ஆயிரத்தி ஐந்நூறும், இந்திய பணம் ஆயிரம் , பாஸ்போர்ட் , இலங்கை குடியுரிமை ஆவணங்கள், மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


Recommended For You

About the Author: Editor