
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரினாலேயே இந்த கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.