
ஸ்ரீ லங்கன் விமான சேவை கட்டார் விமான சேவையுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அடங்கலாக 18 புதிய விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை இந்த புதிய ஒப்பந்தத்தை அடுத்து ஸ்ரீ லங்கன் விமான சேவை 127 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.