
சனிக்கிழமை பரிஸ் உள்ளிட்ட 78 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், மஞ்சள் மேலங்கி போராளிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய மஞ்சள் மேலங்கி போராட்டம் 33 ஆவது வார போராட்டமாகும். நிலவும் இந்த கடும் வெப்பத்தில் போராளிகள் வீதிகளில் இறங்கமாட்டார்கள் என எண்ணியிருந்த வேளையில், நண்பகல் 12:20 மணிக்கு வடக்கு பரிசின் சில இடங்களில் போராளிகள் குவிய ஆரம்பித்தனர். 14:00 மணிக்கு porte de Clichy இலும் சில போராளிகள் குவிந்தனர்.
வரும் நவம்பர் மாதம் வரை போராட்டத்தில் ஈடுபட மஞ்சள் மேலங்கி போராளிகள் தீர்மாணித்திருந்ததால், இவ்வாரமும் தவறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்தவாரம் பரிசில் 1,100 பேர் கலந்துகொண்டிருந்த நிலையில், இந்தவாரம் ஆயிரத்துக்கும் குறைவான போராளிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.