ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இந்தியாவில் நிறைவேற்றும் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என நான் கருத்து கூற முடியாது. அது இந்தியா தனது  நலன் கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள்.
இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் தங்கியிருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு இருந்தால் சர்வதேச சட்டத்தின் கீழ் அதனை சுயாதீனமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு.
எண்களின் விருப்பம் என்னவெனில் அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டும்.
குடியேற வந்தவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நாங்கள் ஆதரவு தெரிவித்த அரசாங்கம் கூட அதனை செய்ய தவறி இருந்தது. ஆனாலும் அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பல முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.
நாடு திரும்புவர்கள் வாழ்வதற்கான வசதிகளை மாத்திரம் செய்து கொடுக்காது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிகளை செய்வதற்கு தொடர்ந்தும் நாங்கள் வலியுறுத்துவோம். என தெரிவித்தார்

Recommended For You

About the Author: ஈழவன்