ஜூலை 1 முதல் பரிசில்- டீசல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

வரும் ஜூலை 1 ஆம் திகதி, திங்கட்கிழமையில் இருந்து பரிசுக்குள் வாகனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து Crit’Air 5 வாகனங்கள் பரிசுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது Crit’Air 4 வகைக்குள் அடங்கும் வாகனங்களும் பரிசுக்குள் தடை விதிக்கப்பட உள்ளன.

ஆனால் அதிஷ்ட்டவசமாக இந்த கட்டுப்பாடு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட டீசல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேவேளை, 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம், குளிரூட்டி வாகனம், பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் பரிசுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 2004 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டர், உந்துருளிகளும் பரிசுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திருத்தம் மூலம் Crit’Air 4 வகைக்குள் அடங்கும் RATP பேருந்துகளும் பரிசுக்குள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor