
இன்று திங்கட்கிழமை 16 ஆம் திகதி காலை முதல் பிரான்சின் தென் மேற்கு மாவட்டங்களில் பலத்த புயல் காற்று வீசி வருகின்றது.
நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூவர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்தும் மோசமான காலநிலை நிலவி வருகின்றது.

Gers, Gironde, Lot-et-Garonne மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு புயல் காற்று மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, செம்மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வாசிகள் முடிந்தவரை வீடுகளை விட்டு வெளியேறுவதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளனர்.