மிட்செல் ஸ்டார்க் அபாரம்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்னஸ் லபுசானே 143 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து முதல் இன் னிங்ஸை தொடங்கிய நியூஸி லாந்து 166 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களைச் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களைக் கைப்பற்றி னார்.

பின்னர் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை விளை யாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனால் 468 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து 2-வது இன் னிங்ஸை விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலியா வின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த அணி 171 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது.

அதிகபட்சமாக வாட்லிங் 40 ரன்கள் குவித்தார். மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகி யோர் தலா 4, பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.


Recommended For You

About the Author: Editor