சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.28,920-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ. 28,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,615க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது.

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.47.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.47.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிராம் வெள்ளியின் விலை 47 ரூபாயிலிருந்து 47.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி 47,000 ரூபாயிலிருந்து 400 ரூபாய் உயர்ந்து 47,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor