மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

மலையகத்தில் தற்போது மழை குறைந்து, பனியுடனான வானிலை காணப்படுவதன் காரணமாக, மலையகத்தின் பல பகுதிகளில், தடிமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய் அதிகரித்துள்ளதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களுக்கும் முதியவர்களுக்குமே,இந்த தொற்றுநோய் அதிகளவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், டெங்கு நோய் பரவும் அபாயமும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, தடிமலோ காய்ச்சலோ ஏற்படுமாயின், உடனடியாக வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் , வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் ​வைத்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, பதுளை, பண்டாரவளை, தியத்தலாவ, மொனராகலை, மஹியங்கனை, வெலிமடை ஆகிய பகுதிகளிலேயே, தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor