நிர்வாண பிரியர்களுக்கு நாளை முதல்…!!

கடந்தவருடத்தை போல நிர்வாண பிரியர்களுக்காக Bois de Vincennes பூங்காவில் ஒரு பகுதி நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்பட உள்ளது.

தினமும் குறைந்தது ஆயிரம் பேராவது வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நிர்வாண பிரியர்களுக்கான விளையாட்டுக்கள், யோகாசனம், உடலோவியம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Bois de Vincennes பூங்காவில், இந்த பகுதி திறக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 30 ஆம் திகதி காலை 11:30 மணிக்கு இந்த பூங்கா திறக்கப்படும் எனவும், அதே நாளில் 15:30 மணிக்கு சிறப்பு யோகா மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தவருடத்தில் 950 பேர் கலந்துகொண்டிருந்தது அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்த நிலையில், இவ்வருடம் இந்த எண்ணிக்கை 1,000 ஐ தொடும் என ஏற்பாட்டாளர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor