
இலங்கை மற்றும் எகிப்திற்கு இடையில் இருதரப்பு அரசியல் ஆலோசனை தொடர்பான ஆரம்ப நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
கெய்ரோவில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ உரையாற்றினார்.
இதன்போது எகிப்தை பங்குதாரராக இணைத்துக் கொள்வதன்மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு மீண்டும் புத்துயிரளிப்பதன் தேவையை செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இரு நாடுகளுக்கு இடையில் வரலாற்று ரீதியாகவும், உன்னதமான இருதரப்பு அரசியல் தொடர்புகள் மற்றும் பல துறைகளில் இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வை உறுதி செய்து இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளுக்காக எகிப்தை பங்குதாரராக இணைத்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கூட்டத் தொடருக்கு அமைய தலைவர்களாக எகிப்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தூதுவர், எகிப்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி தமயந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.