உறுதியானது முன்னாள் ஜனாதிபதியின் பதவி!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த தகவல் உறுதியாகிவிட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், அவரின் பதவியும் பறிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏ.எச்.எம். பௌசியின் வெற்றிடத்துக்கே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor