ஜமால் கொலையில் சவுதி அதிபருக்கு நேரடி தொடர்பில்லை

ஜமால் கஷோக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது சல்மான் மீது நேரடி குற்றச்சாட்டு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 மாநாடு மாநாடு இடம்பெற்றது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஜி-20 மாநாட்டில் இன்று (சனிக்கிழமை) துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி மரணம் குறித்து சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் பேசினீர்களா? என்று ட்ரம்பிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு ட்ரம்ப், “இந்த இடத்தில் இது தொடர்பாக பேசுவதை நினைத்து நான் வருத்தம் கொள்கிறேன். ஜமால் கஷோக்கி கொலைக்கு சவுதி தலைவரை யாரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை” என்றார்.

ஜமால் கஷோக்கியின் மரணம் குறித்த முக்கியமான ஆதாரம் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்துக்குள் கொல்லப்பட்ட கஷோக்கியின் உடலை மறைப்பதற்காக சவுதி அதிகாரிகள் பேசிக்கொண்ட குரல்பதிவு வெளியிடப்பட்டது.

அந்த உரையாடலில் பதிவானவர்களில் சவுதி இளவரசர் முகமது சல்மானின் மூத்த ஆலோசகராக உள்ள மஹிரின் குரலும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்