
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம்(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கட்சியின் தலைமை பதவி தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.