நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செயதுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்