தி.மு.க.வை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது – மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது என தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள் என குறிப்பிட்டார்.

கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தி.மு.க. கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தி.மு.க., கூட்டணி அரசியல் இலாபத்திற்காக அமைந்தது அல்ல. கொள்கைக்காக அமைந்த கூட்டணி. விரைவில் அ.தி.மு.க. ஆட்சி கவிழப்போவது உறுதி.

தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை. இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக தி.மு.க. எம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்