கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 17 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவின் ஐட்டுரி மாகாணத்தில் உள்ள இரண்டு பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

வடக்கு கிவுவில் உள்ள பெனி நகரின் புறநகரில் உள்ள மங்கோலிகேனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மேலும் ஐந்து பேர் பைடா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் உயிரிழந்தனர் என குறித்த நகர மேயர் நியோனி மசும்புகோ பவானகனா தெரிவித்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் பொதுமக்களைன் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்தக் குழுக்களை ஒழிக்கவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டுப் படையுடன் இணைந்து ஐ.நா. படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்