சபரிமலை ஆலய வருமானம் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது

சபரிமலை ஆலய வருமானம் 100 கோடி ரூபாயை  தாண்டியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடந்த மாதம் 16ஆம் திகதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

மேலும்  ஆலய நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  ஆலயத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு 60 கோடி ரூபாயாக இருந்த காணிக்கை வருவாய் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக  அவர்கள் குறிப்பிட்டனர்.

10 வயதுக்கும் 50வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கேரள அரசு அறிவித்துள்ளதால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்