சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகவுள்ளார்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் இவ்வாறு முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ், நேற்று முன்தினம் ஐந்தாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது அவரிடம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்