ஞானசார தேரருக்கு திலங்க சுமதிபால விருந்தளித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால விருந்தளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விருந்துபசார நிகழ்வில் ஞானசார தேரர் உட்பட இன்னும் சில பெளத்த தேரர்களும் திலங்க சுமதிபாலவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கு தேரர் ஆசி வழங்கியதுடன், கலந்துரையாடல் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor