உயிர்த்த ஞாயிறு சந்தேக நபர் சிறையில் மரணம்!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் அது தொடர்பாக அவரது வீட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர்முகம்மட் லேனைச் சேர்ந்த செயினுலாப்தீன் முகம்மட் ஜெஸீல் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து ஸஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் எனும் சந்தேகத்தில் குறித்த இளைஞரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor