பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!

பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு காணொளி வழியாக தமது நன்றி தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது.

இந்நிலையில் அவர் வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்துள்ளார்.

மேலும் பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor