
வட மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 7 ஆயிரத்து 511 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 267 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக வட மாகாணத்தில் இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.