யாழில்.பெருந்தொகை கஞ்சா மீட்பு

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது. எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த இந்தக் கஞ்சா பொதிகள் வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்