செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை!

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் செயற்குழுவினை கூட்டுமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை கடிதத்தில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor