
மிதமிஞ்சிய வேகத்தினால் கெக்கிராவ – அலகமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாலையில் அதிவேகமாக பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் சென்றவர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல எத்தனித்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
எனினும் இந்த விபத்தில் ஏற்பட்ட சேதவிபரம் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.