
வவுனியா, செட்டிக்குளம் பீடியா பண்ணைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கிச் சென்ற ரயிலுடனேயே தண்டவாளத்தில் நின்ற யானை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செட்டிக்குளம் பகுதியில் ரயிலும் மோதுண்டு யானை உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வரும் நிலையில் செட்டிக்குளம் பெரியக்கட்டுப் பகுதியில் அமைக்கப்பட்ட யானைகள் தண்டவாளத்தில் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.