பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்!!

இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியவுடன் இங்கிலாந்துடன் பெரிய ஒப்பந்தமொன்றையும் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “சிறந்த வெற்றிக்கு பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துக்கள்!

பிரெக்சிற் நிறைவேறிய பின்னர் அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய வசதியாக இருக்கும்.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் விட மிகப் பெரியதாகவும் அதிக இலாபகரமானதாகவும் இருக்கும். பொரிஸைக் கொண்டாடுங்கள்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor