கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கொழும்பு மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 65 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய கொழும்பு மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 65 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor