வவுனியாவில் விபத்து – மூவர் காயம்!

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியதனாலேயே நேற்றிரவு(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor