ஹீப்ரு மொழி பேசிய நபர் மீது தாக்குதல்..!!

பரிசில் ஹீப்ரு மொழி பேசிய காரணத்துக்காக நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை Château d’Eau மெற்றோவுக்குள் நுழைந்த 31 வயதுடைய நபர், பின்னர் தனது தொலைபேசியில் தனது தந்தைக்கு குரல்வழிச் செய்தி அனுப்பியுள்ளார்.
அப்போது அவர் ஹீப்ரு மொழியில் பேசியிருந்தார். மெற்றோவில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் குறித்த நபரை தாக்கியுள்ளனர். ஹீப்ரு மொழியில் பேசுவதை கண்டித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டு அவரின் முகத்தில் ஐந்தில் இருந்து ஏழு தடவைகள் வரை குத்தியுள்ளனர்.
என்னை தொடாதீர்கள் என தாம் ஆங்கிலத்தில் சொன்னதாகவும், ஆனால் அதனை மீறியும் அவர்கள் என்னை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
18 ஆம் வட்டாரத்தில் உள்ள Lariboisière மருத்துவமனையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டார். பரிசில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள வேளையில், இது மற்றுமொரு சம்பவமாக பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor