வட மாகாண முன்னாள் ஆளுநர் மீது கொடூர தாக்குதல்!

பாணந்துறைக்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இரண்டு தரப்பிற்கு இடையில் இடையில் ஏற்பட்ட மோதலில் ரெஜினோல்ட் குரே மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் சென்று கொண்டிருந்த வீதியை மறித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு சென்ற ரெஜினோல்ட் குரேவை பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் பொலிஸார் தலையிட்டு இரண்டு பிரிவுகளையும் கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் குடிபோதையில் இருந்தவர்களாலேயே தனக்கு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor