
இன்றும் கணிசமான போக்குவரத்துக்கள் எட்டாவது நாளாக தடைப்பட உள்ளன.
பிரதமரின் புதிய அறிவித்தல்கள் தொழிலாளர்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டு, இன்று மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
TGV சேவைகளில் நான்கில் ஒரு தொடருந்து மாத்திரமே இன்று இயங்கும். நான்கில் மூன்று Eurostar, மூன்றில் இரண்டு Thalys என சர்வதேச சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.

******

அதேவேளை, இரண்டில் ஒரு RER A சேவையும், நெருக்கடியான வேலை நேரத்தில் மட்டும் மூன்றில் ஒரு RER B சேவையும் இயங்கும்.
RER C ஒரு மணிநேரத்துக்கு நான்கு எனவும், RER D ஒரு மணிநேரத்துக்கு மூன்று எனவும் இயங்கும்.
தவிர, மெற்றோக்களில் பத்து சேவைகள் முற்றாக தடைப்பட உள்ளன. முதலாம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழமை போன்று இயங்கும். 2, 3, 3a, 5, 6, 7a, 10, 11, 12, 13 ஆகிய மெற்றோக்கள் முற்றாக தடைப்பட உள்ளன. மீதமான 7 மற்றும் 9 ஆகிய வழி சேவைகள் நெருக்கடியான வேலை நேரத்தில் நான்கில் ஒன்று எனும் கணக்கில் இயங்க உள்ளது.