
நேற்று புதன்கிழமை மிக நெருக்கடியான நாளில், பெண் ஒருவர் தொடருந்தில் வைத்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தின் போது பரிசின் பல்வேறு நிலையங்கள் நெரிசலை சந்தித்திருந்தது.
போதிய தொடருந்துகள் பயணிக்காததால், கிடைக்கும் தொடருந்தில் கூட்டம் முண்டியடித்து ஏறியது. அதேபோன்றதொரு கூட்டம் Villeneuve-Saint-Georges நிலையத்தில் (Val-de-Marne) இருக்கும் போது RER D தொடருந்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
தொடருந்து கார்-து-லியோன் நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. அதன் போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. SNCF ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவியுள்ளனர்.
தாயும் சேயும் நலம். சக பயணிகள் மிகவும் பெருந்தன்மையோடு நடந்துகொண்டனர் என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 நிமிடங்கள் தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டு குழந்தை பிரசவிக்கப்பட்டது. பொது போக்குவரத்தில் குழந்தை பிறந்தால் 18 வயது வரை இலவச நவிகோ வழங்கப்படும். இது தொடர்பாக SNCF இடம் கேட்டபோது, அது தொடர்பாக பின்னர் அறிவிப்போம் என தெரிவித்துள்ளனர்