துணிதுவைக்கும் இயந்திரத்துக்குள்ளும் மனிதர்களை அடைத்துக் கடத்த முயற்சி!

மெக்சிகோ எல்லைப் பகுதியில், ஆபத்தான வகையில் நடைபெற்ற ஆள்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனத்துக்குள் இருந்த பல்வேறு அறைகலன்களிலும் துணி துவைக்கும் இயந்திரத்திற்குள்ளும் மனிதர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சான் டியேகோ நகரிலுள்ள எல்லைப் பகுதியில், இம்மாதம் 7ஆம் தேதி மாலை அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மரப் பெட்டி, மர அலமாரி, துவைக்கும் இயந்திரம் ஆகியவற்றுக்குள் மொத்தம் 11 பேர் ஒளிந்திருந்தனர்.

அவர்கள் அனைவருமே சீனக் குடிமக்கள்.

கடத்தி வரப்பட்டவர்கள் மனிதத்தன்மையற்ற வகையில் அறைகலன்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தது குறித்து எல்லைப் பாதுகாப்புத் துறை இயக்குநர் கவலை தெரிவித்தார்.

அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடுமென்பதை அவர் சுட்டினார்.

11 பேரில் யாருக்கும் பெரிய காயம் ஏதுமில்லை. கனரக வாகனத்தை ஓட்டிவந்த 42 வயது அமெரிக்க ஆடவர் கைது செய்யப்பட்டார்.

ஒளிந்திருந்து அமெரிக்காவுக்குள் புகமுயன்ற 11 பேரும் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவர் எனத் தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor