கைதாகினர் ஏழு இளைஞர்கள்!

சிவனொளிபாத மலைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற சந்தேகத்தில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் கல்புரட்ச விஹாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹட்டன் வீதியால் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குறித்த சோதனை நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

கைதான இளைஞர்கள் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரீகள் மது, போதைப்பொருள், சிகரெட் அல்லது பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், புனித யாத்திரைக்கு தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு வர வேண்டும் என்றும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில யாத்திரீகர்கள் நல்லதண்ணி, சிவனொளிபாத வீதியை பயன்படுத்தி முர்ரே தேயிலைத் தோட்டம் வழியாக சிவனொளிபாத வனப்பகுதிக்குள் நுழைந்து மலைக்கு குறுகிய பாதையில் செல்வதாகவும், இதை தவிர்க்கும்படியும் நல்லதண்ணி பொலிசார் யாத்திரீகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor