வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்பைடு எனும் எண்ணெய் பொருள் அதன் காரத்தன்மைக்கும், கண்களில் நீர் வருவதற்கும் காரணமாக உள்ளது.

இதில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் ஆகியவை ஏராளமான நிறைந்துள்ளது. அடிக்கடி வெங்காயம் சாப்பிடுவதன் நன்மைகள் வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் அது கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களை குணமாக்கும். இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்புகளை கரைக்கும்.

வெங்காயத்தை தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும் போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால், அது சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க உதவுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெய்யையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வலி குறையும்.

வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும் புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்பு மற்றும் சிதைவுகளை சரிசெய்கிறது.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால், உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இருமல் பிரச்சனைகள் நீங்கும்.

வெங்காயச் சாறு மற்றும் வெந்நீரை கலந்து வாய் கொப்பளித்து அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில்


Recommended For You

About the Author: Editor