
நாட்டில் ஏழ்மையை ஒழிக்க ஜனாதிபதியும், பிரதமரும் அவதானம் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பாரிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.