அரசநிறுவனங்கள் அரச கட்டடங்களை நோக்கி நகர்கிறது!!

அரச நிறுவனங்களை, அரசுக்கு சொந்தமான கட்டடங்களுக்கு மாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் கட்டடங்களில் நடத்திச் செல்லப்படும் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தொடர்பாகவே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் தனியார் கட்டடங்களில் நடத்தப்பட்டு வருவதால், மேலதிகமாக செலவுகள் ஏற்படுவதாக சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சில அமைச்சுகள் மற்றும் அமைச்சின் சில பிரிவுகள், சில அரச நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor