சுவிஸ் தூதரக பணியாளரிடம் விசாரணை

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அவர் இன்று(வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இதன்போது அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பாக விசாரணை செய்யப்படவுள்ளது.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்ஸிடம் 3 நாட்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட அனுமதியின் பின்னரே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக இன்று நிதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்