வேலை நிறுத்தம்! – சிறப்பு சேவையில் 220 தனியார் பேருந்துகள்..!!

இன்று புதன்கிழமை தொடர்ச்சியான ஏழாவது நாளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து, இல்-து-பிரான்சுக்குள் தனியார் பேருந்துகள் 220 இயக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவான சேவைகளாவது கொண்டுவரும் முயற்சி என மாகாண முதல்வரும் இல்-து-பிரான்ஸ் போக்குவரத்து துறை அதிகாரியுமான Valérie Pécresse அறிவித்துள்ளார்.

இல்-து-பிரான்சுக்குள் தடைப்பட்டுள்ள பல்வேறு தொடருந்து போக்குவரத்தினை ஈடு செய்ய இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், நவிகோ பயனாளர்களுக்கு எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்பட மாட்டச்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறப்பு பேருந்தில் ஏறும் ஒவ்வொரு நவிகோ பயனாளர்களும் எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவையில்லை.


Recommended For You

About the Author: Editor